districts

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நிவாரணம் வழங்கிட சிஐடியு கோரிக்கை

கடலூர், ஜுன் 2- பொதுமுடக்க காலத்தில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாது காத்திட நிவாரணம் வழங்க வேண்டும் என சிஐ டியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில கன்வீ னர் பி.கருப்பையன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட  சாலையோர வியாபாரிகள் சாலையோரங்க ளிலும், சந்தைகளிலும், திருவிழாக்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் வரக்கூடிய சொற்ப வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு கொரோனா நோய்  பரவலை தடுத்திட கடந்த 10 ஆம் தேதி முதல்  பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் வருமானமின்றி கடும்  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வியா பாரத்திற்கு வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சாலையோர வியாபாரிகள் குடும்பங்களை பாதுகாத்திட அனைத்து சாலையோர வியாபாரிகள், சந்தை மற்றும்  திருவிழா வியாபாரிகளுக்கும் பொதுமுடக்க காலத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். இந்த தொகையினை மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி கணக்கெடுப்பு பட்டியலில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதோடு பட்டியலில் விடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகள் சந்தை மற்றும் திருவிழா வியாபாரிகள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;