சென்னை, அக்.25- உலகிற்கு அதிகம் தெரியாமல் மறைந்திருக்கும் திறன்மிக்க தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு, பலரும் அறியுமாறு செய்யும் நோக்கத்தோடு சின்னி கிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள் சென்னையில் வழங்கப்பட்டன. கவின்கேர், மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் உடன் இணைந்து, இந்த விருது வழங்கும் விழாவை நடத்தியது. புதுடில்லி ஸ்ரீராம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதுநிலை இயக்குனர் அலோக் பி ஸ்ரீராம், கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிகே. ரங்கநாதன் அவர்களோடு இணைந்து இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். இவ்விருது சமூகத்தின் மீது அதிக தாக்க மேற்படுத்தும் அவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 இலட்சம் ரொக்கப்பரிசை கவின்கேர் வழங்கியது. சந்தையாக்கல், நிதி, வடிவமைப்பு, பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மனிதவளம் ஆகிய பிரிவுகளில் புதுமை விருதுகளை வென்றவர்களுக்கு கவின்கேர் வழிகாட்டியாக உள்ளது நிகழ்ச்சி யில் பேசிய சி.கே. ரங்கநாதன் கூறினார்.