districts

சென்னை விரைவு செய்திகள்

கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை

செங்கல்பட்டு, ஆக.6- செய்யூரை அடுத்த அர சூர் கிராமம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பிர பாகரன் (25) என்பவர் கடந்த 2ம்தேதி கஞ்சா வைத்தி ருந்ததாக அம்பத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரி பிரபாகரன் நண்பர்களுடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிவந்து அயப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு விற்றுள்ளார். இதனால் அவர் மீது பொருளாதார ரீதி யாக நடவடிக்கை எடுக்கும் வகையில் அவ ரது வங்கி கணக்கு மற்றும் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஆவடி காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரி வித்துள்ளார்.


விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை, ஆக.6-  சென்னை மீனம்பாக்கத்தில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்க இலாக்கா அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகீம் (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அலி (30) ஆகியோரை சந்தேகத்தின்பேரில்  விசாரிக்கப்பட்டனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 980 கிராம் தங்கம் மற்றும் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்கள், சிகரெட்டு கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாயுடன் வந்து அந்த பார்சலை சோதனை செய்த னர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அந்த பார்சலில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ  520 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறைக்குள் அதனை மறைத்து வைத்து சென்றி ருக்கலாம் என தெரிகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனை யில் ரூ.3 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 6.5 கிலொ தங்கம் மற்றும் லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மண் பாதையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

மதுராந்தகம், ஆக.6- கெண்டிரச்சேரி ஊராட்சியில் பொது பணித்துறைக்கு சொந்தமான பாதையில் மண் சாலைக்கு பதில், தார் சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் கெண்டிரச்சேரி ஊராட்சி உள்ளது. இங்கு, 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்டது வடக்கு காலனி பகுதி. இங்கு, 70 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் போக்குவரத்திற்காக விவசாய பாசன ஏரிக்கரையின் மீது சிறிய அளவிலான மண் சாலை உள்ளது. இந்த சாலை மக்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக இந்த மண் சாலை மாறிவிடுகிறது. கிராம மக்கள் ஒன்றிணைந்து அவ்வப்போது அந்த சாலையை ஜல்லி, மண் கொண்டு சீரமைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த சாலையை முழுமையாக அமைப்ப தற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ஜனநாய முறைப்படிபோராட்டம் குற்றமல்ல

சென்னை, ஆக. 6- ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த  குற்றநோக்கமும் இல்லாமல் பொது வெளியில் 5க்கும் மேற்பட் டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதமல்ல என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. இலங்கை அதி பருக்கு எதிராக கடந்த 2014ல்  போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் சட்டக் கல்லுரி மாணவர்கள் மீது  பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிடும்போது இதனைத்தெரிவித்தார்.


 

;