districts

சென்னை முக்கிய செய்திகள்

வாலிபரிடம் 2 லட்சம் கொள்ளை

சென்னை, மே 12- சென்னை சூளைமேடு திருவள்ளூர்வர்புரம் இரண்டாவது  தெருவில் வசிப்பவர் முகேஷ் (22). இவர் அமைந்தகரையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் செலுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை சென்றார். அவர் வங்கியின் அருகே  செல்லும்போது, அங்கு மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர், முகேஷ் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து முகேஷ், அமைந்தகரை காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்கு புகுந்து நகை பறிப்பு

அம்பத்தூர், மே 12- அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் அழகேசன் (30). இவர் வாகனங்கள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அஞ்சுதா (25). இந்நிலையில் அழகேசனும், அவர் மனைவி யும் செவ்வாய்க்கிழமை இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த அஞ்சுதா கழுத்தில் இருந்த 5 சவ ரன் சங்கிலியை பறித்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அஞ்சுதா, சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த அழகேசன் அந்த நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து அஞ்சுதா அளித்த புகாரின் பேரில், திரு முல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்சியருக்கு தொற்று

கடலூர், மே 12- கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர சாக மூரிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக சந்திரசேகர சாகமூரி  பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களாக ஆய்வு கூட்டங்கள், கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு  கூட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு சில அறிகுறிகள் தென்பட்ட தால் செவ்வாய்க்கிழமை கொரானா பரிசோதனை செய்து கொண்டார். அதனடிப்படையில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்  வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

புதுவையில் தினசரி தொற்று 2,000ஐ கடந்தது

புதுச்சேரி, மே 12- புதுச்சேரியில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை யால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிக ரித்து வருகிறது. இந்நிலையில் புதனன்று புதிதாக 2,007  பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 27 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 1,045  ஆக உயர்ந்துள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

;