districts

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 888 செவிலியர்களுக்கு பதில் 152 பேர்

பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு

செங்கல்பட்டு, ஏப். 22- செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலி யர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் அரசு மருதுவக் கல்லூரி  மருதவமனை செயல்பட்டு வருகின்றது.  23 புற நோயாளிகள் பிரிவு 1,343 உள் நோயாளி களுக்கான படுக்கை வசதி, நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  புறநோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையாகவும், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் ஏற்ப டும் விபத்துக்களில் படுகாயம் அடைபவர்க ளுக்கு உரிய சிகிச்சை வழங்கும் மருத்துவமனை யாகவும் செயல்பட்டு வருவதுடன் தற்போது  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சிசிக்கை வழங்கிடும் மையமாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இம்மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 888 செவிலி யர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 152  செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ரத்த பரி சோதனை தொழில்நுட்ப பணியாளர், ஈசிஜி தொழில்நுட்ப பணியாளர், முடி திருத்தும் பணி யாளர், மருந்து உதவியாளர்கள் என பல்வேறு  பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. பல்வேறு தொழில்நுட்ப பணியாளர்க ளின் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் கூட தாமதம்  ஏற்படுவதாக கூறப்படுகிறது.  

தற்போது செங்கல்டப்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று அதிக ரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவி லியர்களிள் தேவை அதிகரித்துள்ளது. மேலும்  பணியிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று பாதிக்கப்பட்டி ருப்பதால் மீதமுள்ள செவிலியர்கள், பணி யாளர்கள் பணிச் சுமையால் மன உளைச்சலு டன் பணி செய்திடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும்  செவிலியர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகம்  முழுவதும் பயன்படுத்திய முகக் கவசங்கள்,  மருத்துவர்கள் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு கவசங்கள், உடைகள், மருத்துவக்கழிவு கள் என நோய்த் தொற்று ஏற்படும் வகையில்  சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதற்கும் பணி யாளர்கள்  பற்றாக்குறையே காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம்  கேட்டபோது  நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் தற்போது  உள்ள மருத்துவர்கள், செவிலியர்களை வைத்து  பணி செய்வது கடிணமாக உள்ளது. 40 மருத்து வர்கள், 60 தலைமை செவிலியர்கள் தேவை என அரசுக்கு கோரிக்கை  விடுத்துள்ளோம் என்றார்.

200 படுக்கைகள் காலி

கொரோனா நோயாளுக்கு சிகிச்சை வழங்க  தயார் செய்த 400 படுக்கைகளில் 250 படுக்கை களில் தற்போது நோயாளிகள் உள்ளனர்.  200  படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும் 100 படுக்கைககள் தயார் செய்து வருகிறோம். அவர்  களுக்கு தேவையான தடுப்பு ஊசிகள், மருந்து கள் கையிருப்பு உள்ளது, நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் 23 கே.ல் கொள்ளவு கொண்ட 5 திரவ ஆக்ஸிஜன் டேங்குகள் உள்  ளன என்றும் அவர் கூறினார்.
 

;