districts

img

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 19 - சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தப் பட்ட கல்வி உதவித் தொகையை திரும்ப வழங்க கோரி திங்களன்று ( டிச.19) தரமணி மசூதி அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முனைவர் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை யும், 1-10ம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கும் கல்வி உதவித் தொகையையும் ஒன்றிய அரசு நிறுத்தியதை திரும்ப வழங்க வேண்டும், நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க வேண்டும், தமிழக சிறைகளில் நீண்டகாலமாக சட்டத்திற்கு புறம்பாக உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், அரசு நிலங்களில் வசிக்கும் சிறு பான்மையினருக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், சிறுபான்மையினருக்கு சொந்த ஜாமினில் சிறுகடன் வழங்க வேண்டும், கல்லறை மற்றும் கபர்ஸ்தான்களுக்கு தேவையான அளவு நிலம் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சர்வதேச உரிமை தினமான டிச.19 அன்று தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது, இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை நலக்குழுவின் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் பேசுகையில், “திசை திருப்பலான காரணங்களை கூறி சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் போன்ற விளிம்பு நிலை சமூகத்து மாணவர்களின் கல்வி உதவித் தொகையையும் ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது” என்றார். “பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு ஒன்றிய அரசு மக்களிடையே பிளவை உருவாக்குகிறது. வேற்றுமையில் ஒற்றமை என்ற இந்திய பண்பாட்டை சிதைத்து வருகிறது. இதற்கெதிராக தொடர் போராட்டங்களை மேற்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ரஃபிக் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில்,நிர்வாகிகள் கே.வனஜகுமாரி, எஸ்.ராஜேந்திரன், அந்தோணி பெர்னாண்டஸ் மற்றும் தரமணி மசூதி இமாம் உமர் பாரூக் உள்ளிட்டோர் பேசினர்.

;