ஒன்றிய பாஜக அரசு பீடிக்கு விதித்துள்ள 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பீடி தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் வி.நாகேந்திரன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாவட்ட நிர்வாகிகள் ஏ.கோவிந்தசாமி, எஸ்.சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.