districts

img

தேசிய கல்விக் கொள்கை 2022 திரும்பப் பெற வலியுறுத்தி பிரச்சார இயக்கம்

தேசிய கல்விக் கொள்கை 2022 திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சீனுவாசன்  தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில தலைவர் த. உதயசூரியன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் பெ. அலோசியஸ் துரை ராஜ், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தணிக்கையாளர் ஜெயராணி   மற்றும் ஜேம்ஸ் ரொசாரியோ , தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமாநில பொதுச் பிரபாகரன்,    ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜீ. மத்தேயு உள்ளிட்ட பலர் பேசினர்.