சென்னை, ஏப்,2 ஊராட்சிகளின் வழியாக மீஞ்சூர் திருவள்ளவாயல் பேருந்துகளை இயக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பொன்னேரி அருகே புதிய வழித் தடத்தில் பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பொன்னேரி அரசு பேருந்து பணிமனை யில் இருந்து டி 44 புதிய வழித்தடங்களான தேவ தானம், மெரட்டூர், கல்பாக்கம், வேளூர், ஆகிய ஊராட்சிகளின் வழியாக மீஞ்சூர் திருவள்ளவாயல் பேருந்துகளை இயக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப் பூண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஆகி யோர் உத்தரவின் படி மேற்கண்ட பகுதிகளுக்கு புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. இப்பேருந்துகளை சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், டிஜே கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ரவி, ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்கு வரத்து ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.