சென்னை, மே 24 -
பட்டினப்பாக்கத்தில் வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டு பால்கனி இடிந்து ஒருவர் படுகாயமடைந்தார்.
சென்னை மாநகராட்சி 173 வது வட்டம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 142 பிளாக் 4 வது மாடியில் வனிதா மேரி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பிரிட்ஜ் விநியோகம் செய்ய வந்த வாலிபர், அதை படிக்கட்டு வழியாக தூக்கி சென்றார். 4வது மாடி சென்றபோது பால்கனியின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில் வாலிபர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலி பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.
இதனைத்தொடர்ந்து வாரிய அதி காரிகள் தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைத்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிக்குழு உறுப்பினர் ரமேஷ், வாலிபர் சங்க தலைவர் தினேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து வாரிய அதி காரியுடன் பேசினர். அப்போது, பழைய குடி யிருப்புகளை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டுமென்று வலியுறுத்தினர்.