வேலூர், நவ.21 விஐடியில் ராஜேஸ்வரி விசுவநாதன் 16ஆவது நினைவு தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடை பெற்றது. விஐடி வேந்தர் டாக்டர் .கோ. விசுவநாதன் முகாமை தொடங்கி வைத்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து மொத்தம் 443 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சி.எம்.சி மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ரத்த வங்கி களுக்கு தானமாக வழங்கி னர். இந்த நிகழ்வில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர். ஜி.வி.செல்வம், துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் காஞ்சனா பாஸ்கரன் , இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.