districts

சென்னை விரைவு செய்திகள்

இன்று காணும் பொங்கல் மெரினாவில் குளிக்க தடை

சென்னை,ஜன.16- சென்னையில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உற்சாகமாக பொழுதை போக்குவார்கள். இதேபோன்று மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். மெரினாவில் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் கடலில் இறங்கி கால் நனைக்கும் பகுதியில் சவுக்கு கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆள் நடமாட்டம் குறைந்த சாலைகள்

சென்னை,ஜன.16- பொங்கல் பண்டி கையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்க ளுக்கு சென்றுள்ளனர்.  இதனால் சென்னை சாலை களில் ஆள்நடமாட்டம் குறை வாகவே உள்ளது.

ரேசன் கடையில் திருட்டு

சென்னை,ஜன.16- சென்னை கே.கே நகர் 4-வது செக்டார் 14-வது தெருவில் திருவல்லிக் கேணி நகர கூட்டுறவு அங்காடியில் ஞாயிறன்று பூட்டு உடைக்கப்பட்டு 20  லிட்டர் பாமாயில் பாக் கெட்டுகள் திருடப்பட் டுள்ளது.  இதுகுறித்து கே.கே.நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹஜ் பயணத்திற்கு விமானம்

சென்னை,ஜன.16- புனித ஹஜ் பயணத் திற்கு இந்த வருடம் சென்னையில் இருந்து விமானம் இயக்கப்படும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர்  தெரிவித்து ள்ளார். மேலும், ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை எனவும் கூறினார்.