districts

பட்டா கத்தி மாணவர்கள் கைது

சென்னை, அக்.10- கும்மிடிப்பூண்டி புற நகர் ரயிலில் கல்லூரி மாண வர்கள் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேக மாக பரவிய நிலையில், கல்லூரி மாணவர்கள் 4  பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள் ளனர். ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் ரயில் நிலை யத்திற்குள் ரயில் நுழைந்ததும் நடைமேடை யில் பட்டா கத்தியை உரசிய படி சென்றனர். அடுத்த டுத்து ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில் நுழையும் போது வீடியோ எடுக்க சொல்லி மீண்டும் நடை மேடையில் பட்டா கத்தியை  உரசியபடி பயணித் துள்ளனர். இதைப்பார்த்த ரயிலில் பயணிக்கும் சக  பயணிகள் அதிர்ச்சி அடைந் தனர். இந்த வீடியோ சமூக  வலைதளத்தில் வைரலா னதை அடுத்து, கொருக்குப் பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மூன்று  பேர் உட்பட நான்கு மாண வர்களை ரயில்வே காவல்  துறையினர் பிடித்து  விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் கும்மி டிப்பூண்டி எல்லாவூர் பகுதியைச் சேர்ந்த மாநில கல்லூரி மாணவர்கள் அருள் மற்றும் இரண்டு சிறுவர்களும் கத்தியை நடைமேடையில் தேய்த்த படி சென்றதும் மற்றொரு  சிறுவன் அந்த ரயில் பெட்டி யில் பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.