சென்னை.பிப்,26- பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்களின் சாதனைகளை கவுரவித்து, அங்கீகரிக்கும் வகையில் ரியலிஸ்டிக் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. மலேசியா வர்த்தக தூதரக ஜெனரல் வான் அகமது தர்மிசி, கனரா வங்கியின் இயக்குநர் நளினி பத்மநாபன் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர். பழம்பெரும் திரைக்கலைஞர் சாந்தி வில்லியம்ஸ் தென்னிந்திய சினிமாவிற்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். டாக்டர்.ஸ்ரீதேவிதேவானந்த், ஆர்.ஜே.தோஷிலா, டாக்டர்.ஆரத்தி அருண், கட்டிடக்கலை நிபுணர் சத்யா மாதவன், ஃபேஷன் டிசைனர் `ஹீனா, சாரங்கி இசைக்கருவி கலைஞர் மனோன்மணி, எழுத்தாளர் லதா சரவணன், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் கோமதி ஆகியோர் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.