districts

img

ஆயுர்வேத மருத்துவர்களுக்கு விருது

சென்னை, பிப். 24= ஸ்ரீ ஆயுர்வேதிக் குழுமம் ‘வம்ச வைத்யா விருதுகள்’,  வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்.24)  நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் விருது களை வழங்கினார். சிறந்த நடுவர் குழு வால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்  பட்டவர்களுக்கு வம்ச ஸ்ரீ, வம்ச ரத்னா வம்ச பூஷன் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில் என்.சி.ஐ.எஸ்.எம் தலைவர்  டாக்டர் ஜெயந்த் தியோ பூஜாரி -உடுப்பி எஸ்டிஎம் ஆயுர்வேத கல்லூரியின் முதல்வர் மம்தா நவீன், எஸ்டிஎம் ஆயுர்வேத கல்லூரி முதல்வர் டாக்டர் பிரசன்னா நரசிம்ம ராவ்,  திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்   உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.