districts

img

ஆட்டோ ஓட்டுநர் குடும்ப பாதுகாப்பு நிதி

சிஐடியு புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தெய்வசிகாமணி, பாபு,  ராஜி. ஆகிய மூன்று ஆட்டோ தொழிலாளர்கள் அண்மையில் உயிரிழந்தனர். உயிரிழந்த  ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு  குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி முதலியார்பேட்டையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ சங்க பிரதேச தலைவர் மணவாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு மாநில தலைவர்  பிரபுராஜ்,செயலாளர் சீனுவாசன் முன்னிலையில் இறந்த உறுப்பினர்களின்  குடும்பங்களுக்கு தலா ரூ.13ஆயிரம் 3 குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் துளசிங்கம். பழனி பாலன். நூர்முகமது. செல்வம். செந்தில். சங்கர். ரவிக்குமார் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.