சென்னை, ஜன. 25- சென்னை நம்மாழ்வார் பேட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் இந்துமதி. மேற்கு தாம்பரத்தில் வசிப்பவர் சம்பத் இவரது மனைவி கலா. இவர்களது மகன் தினகரன். தினகரனும், இந்து மதியும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலை யில் தினகரன் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்ப தால் கலா, இந்துமதியை மதம் மாற வேண்டுமென கூறி னார். இதற்கு இந்து மதி குடும்பத்தினர், திருமண த்திற்கு பின் மதம் மாற்றி க்கொள்ளுங்கள். தற்போது பதிவு திருமணம் செய்து வைக்கலாம் என தெரி வித்துள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டுச் சென்ற தினகரன் குடும்பத்தி னர், வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தினகரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுகுறித்து இந்துமதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளுடன் முறையிட்டார். இதை யடுத்து மாதர் சங்க நிர்வா கிகள் பிரமிளா, பூங்குழலி, மாரியம்மாள், லீலா, ராஜலட்சுமி, செங்கம்மா, வேல்விழி சிபிஎம் பகுதிச் செயலாளர் வீ.செல்வராஜ் ஆகியோர் இந்துமதியுடன் சென்று ஜி.5 மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப் படையில் பெண் காவலர்கள் தினகரன், இந்திமதி ஆகி யோருக்கு கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தை பதிவு செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.