விழுப்புரம், மே 14-
மரக்காணத்தை அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி யவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 10 பேர விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். 5 பேர் மரக்காணம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர் புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனையிலும், ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேரில் சந்தித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு விழுப்பு ரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பிரத்யேக சிறப்பு சிகிச்சை அறை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”என்றார்.
மரக்காணம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.