districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே நகரச் செயலாளர் இ.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் மா.அன்புமணி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.பழனி, தலைவர் மு.சிவகுமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம், விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கே.வெங்கடேசன், தலைவர் கே.கார்த்திகேயன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அலமேலு, பி.சேகர் (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.