districts

img

அண்ணாமலையார் மலையில் தீ

திருவண்ணாமலை,ஆக.19- திருவண்ணாமலையில், சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவும், 2,668 அடி உயரம் கொண்ட மலை அமைந்துள்ளது.   இந்த மலையின் தெற்கு பகுதியில், இலங்கை முகா முக்கு பின்புறம், உள்ள அடிஅண்ணாமலை காப்பு காட்டில்,  வெள்ளிக்கிழமை (ஆக.18) மாலை, சில மர்ம  நபர்கள் தீ வைத்தாக கூறப்படுகிறது. மேலும்  பலத்த  காற்று வீசியதால் மலையில் தீ  அதிவேகமாக பரவ  தொடங்கியது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வனச்சரகர், வன பணியாளர்கள்,  பொது மக்கள் ஒத்துழைப்புடன் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மலையில் பல மரங்களும், மூலிகைச்  செடிகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை உதவி வனப்பாது காவலர் தலைமையில், வனச்சரகர் மற்றும், சரக காப்பாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், விபத்து ஏற்பட்ட இடத்தை களத்தணிக்கை செய்து, வனத்தீ ஏற்பட காரணமாக இருந்த குற்றவாளிகளை தேடி வரு கின்றனர். திருவண்ணாமலை மலையில் சமூக விரோதிகள் சிலர் மலைக்குச் சென்று தீ வைத்து தப்பி செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாகவும், இதுபோல சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வனத்துறையினரும் காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மலையை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டு வதை தவிர்க்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.