districts

img

சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியில் ஐஇடி உறுப்பினர்கள் நன்மைகள் கருத்தரங்கு சமீபத்தில் நடைபெற்றது

சென்னை, மே 17-

    சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியில் ஐஇடி உறுப்பினர்கள் நன்மைகள் கருத்தரங்கு சமீபத்தில் நடைபெற்றது.  ஐஇடி வாடிக்கையாளர் பிரிவு மேலாளர் நேகாசிங் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு ஐஇடியின் உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்தும் அத்தியாவசிய சேவைகளை இதன் உறுப்பினர்கள் எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தது.

   மேலும் ஐஇடி உறுப்பினர்களுக்கு கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகள் மற்றும் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவி அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் நேகா சிங் விளக்கமாக எடுத்துக்கூறியதாக கல்லூரியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.