districts

டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்கள் தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,மார்ச் 4- மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-
கண்காணிப்பு குழு
மேட்டூர் அணையின் நீர் இருப்பு தொடர்ந்து போதிய அளவில் உள்ள தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதத்திற்குள் தூர்வாரி டும் பணிகளை முடிக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கீடு செய்தி டுவதோடு, பணிகள் முழுமையாக நடைபெறுவதை கண்காணிக்க விவசாய பிரதிநிதிகள் உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் ஏராளமான சிறு பாசனத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு இல்லாமல் செயல் படுத்த முடியாமல் கிடப்பில் உள்ளன. இத்திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் புதிய பாசன வசதிகள் ஏற்படும். விவசாயிகளின் பல்வேறு பிரச் சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவும், அரசுக்கு ஆலோ சனை வழங்கவும் மாவட்ட அள விலும், மாநில அளவிலும் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டு குழுக்கள் அமைக்க வேண்டும்.
புதிய நெல் ரகங்கள்
பருவநிலை மாற்றம் மற்றும் புதிய, புதிய நோய்கள் உருவாகு வதை கவனத்தில் கொண்டு நெல் ஆராய்ச்சி நிலையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாறிவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய நெல் ரகங்களை உருவாக்கி விவசாயி களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.
அறுவடை எந்திரம்
ஒரே நேரத்தில் தீவிரமான நெல் அறுவடை பணிகள் நடைபெறும் போது தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் வாடகையை கடுமையாக உயர்த்துகின்றனர். அரசின் சார்பில் முத்தரப்பு கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர்கள் வாட கையை நிர்ணயம் செய்கின்றனர். இரு ப்பினும் நிர்ணயம் செய்த வாட கையை விட கூடுதலாக வாடகை வாங்குகின்றனர். இதை முறைப்ப டுத்திட அந்த அந்த மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் பதிவு பெற்று தனியார் எந்திரங்களை அறுவடைக்கு அனுமதிக்க வேண்டுகிறோம்.
அரசு சார்பில் காப்பீட்டு நிறுவனம்
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விவ சாயிகளுக்காக தமிழ்நாடு அரசு பெரும் தொகையை காப்பீட்டு நிறுவனங் களுக்கு செலுத்துகிறது. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயி களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கு வது மிக குறைவாக உள்ளது. (உதாரணம் 2021-22 இல் தமிழ்நாடு அரசு செலுத்தியது ரூ. 1338.89 கோடி, ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியது ரூ.481 கோடி மட்டுமே) எனவே தமிழ்நாடு அரசின் சார்பில் பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை துவங்க பரிசீலிக்க வேண்டும். இந்த ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு குறித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருவதை வரவேற்கிறோம். சிறு தானியங்களை உரிய விலை கொடுத்து அரசே கொள்முதல் செய்து பொதுவிநியோகம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். விவசாயத்தில் தற்போது அனைத்து வேலைகளுக்கும் இயந்திர பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலை யில், வேளாண்மை பொறியியல் கல்லூரி - மற்றும் ஆராய்ச்சி நிலை யங்களை டெல்டா மாவட்டத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேரில் ரப்பர்  பயிரிடப்படுகிறது. அரசு ரப்பர் தோட்டங்கள் தவிர்த்து பெரும்பகுதி 2 ஏக்கருக்கு குறைவாக ரப்பர் தோட்டங்கள் வைத்திருக்கும் விவசா யிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ரப்பர் இறக்குமதியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ரப்பர் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு கூடுதலான ஆதரவு விலை நிர்ண யிக்க வேண்டும். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களை மதிப்பு கூட்ட ப்பட்ட பொருளாக மாற்றி தயாரித்து விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” ஏற்கனவே அறிவித்துள்ளது. அச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி வேளாண் சார்ந்த தொழில்களை காவிரி டெல்டா மாவட்டங்களில் துவக்குவதற்கு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் ்கிறார்.

;