districts

சாதிப்பதற்கு வயது தடையில்லை பி.எச்.டி. பட்டம் பெற்ற முதியவர்

சென்னை, ஜூலை 29-  சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 1978ம் ஆண்டு ஆர்.ராஜகோபால் என்பவர் வேதி யியல் பொறியியல் துறையில் பி.டெக். பட்டம் பெற்றவர். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பித்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். 70 வயது ஆன நிலையிலும் படிப்பு மீதுள்ள ஆர்வம் காரண மாக ஆராய்ச்சி படிப்பை முடித்து வெள்ளியன்று  அண்ணா பல்கலைக்கழ கத்தில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றுள் ளார். இதுகுறித்து ராஜகோபால் கூறுகையில், “ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சி னைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றேன். ஆய்வகத்தில் உள்ள தண்ணீரை 2 வெவ்வேறு முறைகளில் சுத்திகரித்தேன். அவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்து ரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் வருமா? என்பதை கண்டறிய முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தேன். இது ஒரு ஆரம்ப ஆய்வுதான் என்றார்.