districts

img

மாதர் சங்க எதிர்ப்பையடுத்து ஆபாச விளம்பரப்பலகை அகற்றம்

சென்னை, டிச. 24 - சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பையடுத்து தனியார் ஓட்டல் வைத்த ஆபாச விளம்பரம் அகற்றப்பட்டது. சென்னை சின்னமலை மெட்ரோ நிலையம் அருகே தனியார் ஓட்டல் ஒன்று ஆபாச டிஜிட்டல் விளம்பரம் செய்திருந்தது. அதனை வீடியோ, படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டதையடுத்து அந்த ஆபாச விளம்பர பலகை அகற்றப்பட்டது. இதனிடையே அந்த ஓட்டல் முன்பு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் ஆர் ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர். இதனையடுத்து சங்கத்தின் மாநில பொரு ளாளர் பிரமிளா, தென் சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சரவண செல்வி , செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.