districts

img

போராட்டத்தால் 44 நபர்களுக்கு பட்டா விவசாயிகள் சங்கத்திற்கு வெற்றி

திருவள்ளூர், மார்ச் 27- குடிமனை பட்டா வழங்க வேண்டும் மற்றும் தோராய பட்டாக்களை கிராம பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (மார்ச் 27), தாமரைப்பாக்கம் அருகில் உள்ள அமணம்பாக்கம் வருவாய் அலு வலர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வட்டம் அமணம் பாக்கம் பிர்காவிற்கு உட்பட்ட மாகரல், கொமக்கம்பேடு,  அமணம்பாக்கம்,  அகாரம் செம்பேடு, வெங்கல் போன்ற கிராமங்களில் குடியிருந்து வரும் 400 கும் மேற்பட்ட மக்களுக்கு குடிமனை பட்டாக்கள் வழங்க வேண்டும். மேலும் கடந்த 15 வருடங்களுக்கு முன் கொடுக் கப்பட்ட பட்டாக்களை கிராம கணக்கு களில் பதிவேற்றும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 29 அன்று 400க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்  இதே அலுவ லகம் முன்பு  நடைபெற்றது.

உண்மைக்கு புறம்பாக பேசுவதா?

அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தின் போது  திருவள்ளூர் வட்டாட்சி யர்,  துணை வட்டாட்சியர், ஆர்.ஐ, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து  கொண்டு பேச்சு நடத்தினர். அப்போது பொதுமக்கள் மத்தியில் மனுக்களை பெற்றுக் கொண்டு  கிராம வாரியாக பிரித்து நத்தம், பாட்டை புறம்போக்கு, தோப்பு புறம்போக்கு போன்றவற்றை பிரித்து,  ஆட்சேபனைக்குறிய  இடங் களில் குடியிருக்கும் மக்களுக்கு ஒரு மாத காலத்தில் பட்டா வழங்கப்படும்.  மேய்க்கால், காடு, வெட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் மனுக்களை உயர் அதிகாரி களுக்கு பரிந்துரைப்பதாகவும் ஒப்புக் கொண்டனர்.   நான்கு மாதங்கள் கடந்தும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.  போராடக் கூடிய மக்களை அந்த நேரத்தில் உண்மைக்கு புறம்பாக பேசி போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரு கின்றனர்.  சட்டத்திற்கு உட்பட்டு குறைந்தபட்ச நியாயத்தை கூட நிறை வேற்ற அதிகாரிகள் தயாராக இல்லை. ஏழை எளிய மக்கள்தான்,  பல வரு டங்களாக வசதி இல்லாமல் மேற்கண்ட  இடங்களில் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு பட்டா கொடுக்க எது தடையாக உள்ளது என்று தெரிய வில்லை.   இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற  மீண்டும் திங்களன்று (மார்ச் 27),  காத்திருக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக் கோட்டை வட்டச் செயலாளர் எம்.பழனி தலைமையில் அமணம்பாக்கம் ஆர்.ஐ அலுவலகம் முன்பு நடை பெற்றது.  இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், வட்ட தலைவர் பி.விஸ்வநாதன், மாதர் சங்கத்தின் வட்டத் தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

44 நபர்களுக்கு பட்டா 

போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாச்சியர் மதியழகன் உடனடி யாக 44நபர்களுக்கு குடிமனை பட்டாக்களை வழங்கினார். தோப்பு புறம்போக்கு, பாட்டை புறம்போக்கு, மேய்க்கால், காடு, வெட்டுப்பள்ளம் ஆகியவற்றில் குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என உயர் அதிகாரி களுக்கு பரிந்துரைப்பதாகவும் அதி காரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் காயத்ரி, பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

;