districts

img

3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஆக. 13 - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதி யர்களுக்கு 3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை முன் தேதியிட்டு ஜனவரியி லிருந்து வழங்க வேண்டும் என்று கோரப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்ட 4வது மாநாடு சனிக்கிழமையன்று (ஆக.13) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு வழங்குவதுபோல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9ஆயிரம் ரூபாயும், மருத்துவப் படியாக 1000 ரூபாயும் வழங்க வேண்டும். 21 மாத நிலுவையை வழங்குவதோடு, குடும்ப நல நிதியை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைப்படி வயது உயர்வுக்கேற்ப ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் பி.ஏபெல் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் பி.மகேஸ்வரி வர வேற்க, துணைத்தலைவர் எஸ்.ஏ.முபாரக் பாட்சா வரவேற்றார். ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அமைப்பு அறிக்கையை மாவட்டச் செயலாளர் என்.ராமசாமியும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ம.சந்திரனும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் கி.இளமாறன், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பின் மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நெ.இல.சீதரன் நிறைவுரையாற்றினார். துணைத்தலைவர் வி.தேவன் நன்றி கூறினார். சங்கத்தின் தலைவராக பி.எஸ்.அப்பர், செயலாளராக என்.ராமசாமி, பொருளா ளராக ஜெ.பட்டாபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;