பூம்புகார் மீனவர்களுக்கு நாலாவது குழுவாக மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமம் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் தலைமை தாங்கிய எழுத்தாளர் கடலார் பங்கேற்று பேசினார். இதில் சிஃப்நெட் துணை இயக்குநர் ஏ. ரவிச்சந்திரன், பொறுப்பாளர் அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் மணிமாறன்,கடல் சார் மக்கள் நல சங்கமம் பொதுச்செயலாளர் எல்.பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்