சென்னை, ஜூன் 16
அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி 2023-இன் இரண்டாவது பதிப்பு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ளது.
மதுரையில் ஜூன் 20-ஆம் தேதி ரெசிடென்சி ஹோட்டலிலும்; திருச்சியில் ஜூன் 21-ஆம் தேதி ஃபெமினா ஹோட்ட லிலும்; சேலத்தில் ஜூன் 22-ஆம் தேதி ஜி.ஆர்.டி. ஹோட்டலிலும்; கோயம் புத்தூரில் ஜூன் 23-ஆம் தேதி தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலிலும் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன் இடம்பெறும்.
இக்கல்விக் கண்காட்சியில் வோல்கோ கிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Volgograd State Medical University), இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Immanuel Kant Baltic Federal University), கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Kazan State Medical University), தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம் (National Research Nuclear University MEPhI), குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம் (Kursk State Medical University), மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனம், ஹையர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (Moscow Institute of Physics and Technology, and Higher School of Economics) ஆகிய ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9282 221 221 / 99401 99883.