districts

img

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் துவக்க விழா

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் துவக்க விழாவையொட்டி திமுக சார்பில் புதுச்சேரி அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு திமுக மாநில அமைப்பாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏ.வி.சுப்ரமணியன் (காங்கிரஸ்), ராஜாங்கம், வெ.பெருமாள் (சிபிஎம்), சலீம் (சிபிஐ), கபிரியேல் (மதிமுக), தேவ.பொழிலன் (விசிக) உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.