districts

img

கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்த காவல்துறையினர்

சீர்காழி, ஜன.8 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பகுதியில் அமைக்கப் பட்டிருந்த இரும்புராடு உடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. இணைப்பு பகுதியில் இருந்த சிமெண்ட் கான்கிரீட் உடைந்திருந்தது.  இதனால் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத் தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த பயத்துடன் வாக னங்களை இயக்கி வந்தனர்.  பாலத்தின் நடுப்பகுதி யில் ஏற்பட்டுள்ள உடைப்பு பகுதியை சரி செய்ய பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 10  நாட்களாக அதிகாரிகள் பாலத்தின் நடுவே உடைந்த  பகுதியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இந்நிலையில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமு தாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் ஆகி யோர் வெள்ளியன்று, அவர்களது சொந்த செலவில் பணியாட்கள் மூலம் தற்காலிகமாக பாலத்தின் நடுவில்  ஏற்பட்ட விரிசலை சிமெண்ட், ஜல்லி கலந்த கான்கிரீட் கலவையை கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு,  பாலத்தின் விரிசலை சரி செய்தனர். இதனால் பாலத்தின் நடுவில் ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்ட விரி சலை சரிசெய்த கொள்ளிடம் போலீசாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதில் கவனம் செலு த்தி நிரந்தரமாக பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

;