ஈரோடு, ஏப்.30- பெருந்துறை சிப்காட்டில் வாலிபர் சங்கத்தின் சார்பில் 8 மணி நேர வேலை வரலாறு குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்க பெருந்துறை தாலு காக்குழு சார்பில் பெருந் துறை சிப்காட் நுழைவு வாயி லில் திறந்த வெளி கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு தாலுகா செயலாளர் செ.அஜித்குமார் தலைமை வகித் தார். “8 மணி நேரமும், அதன் வரலாறும்” தலைப்பில் சிஐடியு முன்னாள் மாநில உதவி பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து கருத்துரையாற்றினார். இதனைத்தொ டர்ந்து, “இந்தியாவில் தொழிலாளி” எனும் தலைப்பில் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.பரமசிவம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.ஸ்டாலின், செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் கு.சதிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.