districts

வாரத்தில் 6 நாட்கள் பணி வழங்குக!

திருநெல்வேலி, ஏப்.28-வாரத்தில் 6 நாட்கள் பீடி சுற்றும்பணி வழங்க வேண்டும் என நெல்லையில் பீடித் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் முக்கூடலில் சிஐடியு பாப்பாக்குடி ஒன்றிய பீடிசங்க பேரவை கூட்டம் சூசைஅருள் சேவியர் தலைமையில் நடைபெற்றது.இதில் சங்க மாவட்டத் தலைவர் ம.ராஜாங்கம், மாவட்ட துணைத் தலைவர் மகாவிஷ்ணு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.மாரிசெல்வம் ஆகியோர் பேசினர். 2019 ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்ட பஞ்சப்படி ரூ.6.06. பைசாவை வழங் காத பீடி கம்பெனிகள் உடனே வழங்கவேண்டும். தரமான இலை வழங்கவும்வாரத்திற்கு 6 நாட்கள் 6000 பீடி சுற்றுவதற்கு வேலை வழங்க வேண்டும். மாதம் முழுவதும் முழுமையாக வேலை வழங்க வேண்டும். அனைத்துதொழிலாளர்களுக்கும் பி.எப். பிடித்தம்செய்ய வேண்டும். தாமதம் இல்லாமல்பணிக் கொடை வழங்க வேண்டும். முக்கூடல் பேரூராட்சியில் கலங்கலாக வரும் குடிநீரை சுத்தமாக வழங்கவேண்டும். முக்கூடல் ஆலடியம்மன் கோவில் தெரு ரேசன் கடையில் முறையாக பொருட்கள் வழங்கப்படுவது இல்லை. மக்களை அலைக்கழிக்கும் பணியாளரை உடனே மாற்ற வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் பீடித் தொழிலாளர் சங்கத்தின் பாப்பாக்குடி ஒன்றிய புதியநிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக இந்திரா, செயலாளராக சூசை அருள்சேவியர், பொருளாளராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவர்களாக மாரிசெல்வம், இன்பராஜ்,துணைச் செயலாளராக பத்மநாபன்,கருப்பசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;