districts

img

சம்பள பாக்கியை வழங்காத ஒப்பந்ததாரர்

ஈரோடு, மே 31- ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம்  வழங்காததை கண்டித்து, குடிநீர் வடிகால் வாரிய பணியா ளர்களின் உள்ளிருப்பு போராட்டத் தையடுத்து, ஒருவாரத்தில் நிலுவை  ஊதியத்தை வழங்குவதாக  உறுதியளித்ததையடுத்து  போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருப்பூர் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்டது ஈரோடு மாவட்டம், கொடுமுடி முதல் திருப் பூர் மாவட்டம், தாராபுரம் வரையி லான பகுதியாகும். இப்பகுதியை ஆர்பிபி குழுமம் பராமரிப்பு பணி களுக்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதில் எலக்ட்ரீசியன், பொருத்துநர் மற்றும் பராமரிப்பாளர் என சுமார் 75 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர்.  இத்தொழிலாளர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதல் வாரத்தில் வழங்க வேண்டிய சம்பளம் வழங்கவில்லை. மேலும், விடுமுறை தினம் மற்றும் மிகை நேர பணிக்கு வழங்க வேண்டிய இரட்டிப்பு ஊதியமும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கோரிக்கையை முன் வைத்தும் கண்டுகொள்ளாத நிலையில், பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் நிர்வாகப் பொறியாளர்  அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் பி.குணசேகரன் தலை மையில், மாவட்ட செயலாளர் சி. பிரகாசம், தாராபுரம் கிளை தலை வர் குமாரசாமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  இதனையடுத்து, புதனன்று  நண்பகல் வரை தொடர்ந்த  போராட்டத்திற்கிடையே நிர்வாகப்  பொறியாளர் பேச்சுவார்த்தை நடத் தினார். அப்போது ஒருவாரத் திற்குள் பிரச்சனைக்குத் தீர்வு  காணப்படும் என உறுதியளித்த தால் போராட்டம் தற்காலிகமாக  விலக்கிக் கொள்ளப்பட்டது.

;