districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கூலியை உயர்த்தி வழங்கு விதொச ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 22- நூறு நாள் வேலைத்திட்டத்தில் தினக்கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சேலம்,  ஓமலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் காடையாம்பட்டி தாலுகா தும்பிபாடி பஞ்சாயத்து  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத் தின் மாவட்ட செயலாளர்  எஸ்.கே.சேகர், மாவட்ட தலைவர்   ஜி.கணபதி மற்றும் தாலுகா செயலாளர் ஆர். ரவிக்குமார்,  தாலுகா தலைவர் சின்ராஜ், விவசாய சங்க தாலுகா செய லாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு ரூ.1.15 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், ஜூன் 22- ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு ரூ.1.15 லட்சம் வழங்க வேண்டும் என அஞ்சல் துறைக்கு, நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியரான காளியம்மாள் (68). இவர் சேந்தமங்கலம் அஞ்சல் நிலையத்தில் மாதாந்திர வைப்பீட்டுக் கணக்கு வைத்திருந்தார். கடந்த 2009 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012 அக்டோபர் மாதம் வரை  மாதம் ரூ.2 ஆயிரம் வீதம், காளியம்மாள் வைப்பீடு செய்த  பணம் ரூ.52 ஆயிரம் அவரது கணக்கில் இருந்து வந்துள்ளது.  இதற்கிடையே காளியம்மாளின் மகன் கதிரவன், 2013  ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அஞ்சல் நிலையத்துக்குச் சென்று, மோசடியாக அவரது கணக்கை முடித்து பணம்  பெற்று வருமாறு தம்மை நியமித்துள்ளதாக, சேந்தமங்கலம் அஞ்சல் நிலையத்தில் அதற்கான படிவங்களை வழங்கி யுள்ளார். இதனை ஏற்று கணக்கை முடித்து ரூ.52 ஆயிரத் துக்கான காசோலையை கதிரவனிடம் அஞ்சல் நிலைய அலு வலர் வழங்கியுள்ளார். இந்த காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்ய காளியம்மாள் பெயரில், பரட்டைய கவுண்டன் புதூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  கதிரவன் சேமிப்பு கணக்கு ஒன்றை மோசடியாக தொடங்கி யுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கூட்டுறவு வங்கி செயலாளர் காளியம்மாளுக்கு தகவல் தெரிவித்ததில், அஞ்சல் நிலையத் திலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் கதிரவன் மோசடியாக காளியம்மாளின் கையெழுத்தை போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காளியம் மாள் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், சரிவர  ஆய்வு செய்யாமல், தமது கணக்கை முடித்து பணத்தை  காசோலையாக தமது மகனிடம் வழங்கியது சேவை குறை பாடு என்று, கடந்த 2015 ஆம் ஆண்டு காளியம்மாள் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற  நீதிபதி வீ.ராமராஜ், செவ்வாயன்று தீர்ப்பு வழங்கினார். அதில், காளியம்மாளின் தொடர் வைப்பீட்டு கணக்கை முடிப்பதற்கான படிவத்தை சரிவர கவனிக்காமல், கதிர வனிடம் காசோலை மூலமாக வழங்கப்பட்ட பணமானது,  பரட்டைய கவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கியில் காளியம்மாள் பெயரில்  மோசடியாக தொடங்கப் பட்ட கணக்கில், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம்  தேதியில் நிலுவையில் உள்ள ரூ.70,506 மற்றும் பின்  வட்டியை கூட்டுறவு வங்கி வழக்கு தாக்கல் செய்தவருக்கு நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இதனைப்பெற அவருக்கு சிரமங்கள் இருப்பின், அத்தொகையை சேந்த மங்கலம் அஞ்சல் நிலைய அலுவலரும், நாமக்கல் அஞ்சல்  கண்காணிப்பாளரும் எட்டு வார காலத்திற்குள் காளியம் மாளுக்கு இந்த பணத்தை வழங்கிவிட்டு கூட்டுறவு வங்கி யிலிருந்து தொகையை பெற்று கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இதர சிரமங்களுக்கு அஞ்சல் துறை யினர் இழப்பீடாக ரூ.45 ஆயிரத்தை நான்கு வாரங் களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க  மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், ஜூன் 21 - ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவராக மா.நாட்ராயன், மாவட்ட செயலா ளராக ஜெ. ஜெயப்பிரகாசம், மாவட்ட பொருளாளராக ஏ.சுந்த ரராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக எஸ். கிருஷ் ணசாமி, ஸ்ரீரங்கராயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். இத்துடன் மாவட்ட துணைத்தலைவர்களாக நான்கு  பேரும், மாவட்ட இணைச்செயலாளர்களாக நான்கு பேரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நஞ்சராயன் குளம் சரணாலய நில உரிமை ஆட்சேபணை தெரிவிக்க வாய்ப்பு

திருப்பூர், ஜூன் 22 - திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சராயன் குளம் பறவை கள் சரணாலயம் அமைய வுள்ள நிலத்தில் உரிமைகள் குறித்து ஏதேனும் ஆட்சே பணை இருப்பின் படிவம் 8-ல்  தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் கூறியுள்ளார். வரும்  ஆகஸ்ட் 8 பிற்பகல் 5.45- மணிக்குள் ஆட்சேப ணையை அனுப்பி வைக்கும் படியும் அவர் கூறியிருக்கி றார்.

சாமுண்டிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்

திருப்பூர், ஜூன் 22 - திருப்பூர் மாநகர மக்க ளின் நீண்ட கால கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாந கர குழு சார்பில் தெருமுனை  கூட்டம் சாமுண்டிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் வடக்கு மாந கர தலைவர் கண்ணன் தலை மையில், முன்னாள் மாநில  செயலாளர்  இரா.வேல்முரு கன் சிறப்புரை ஆற்றினார். சங்க மாவட்ட தலைவர் எஸ். அருள், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, வாலிபர் சங்க முன் னாள் மாநகரத் தலைவர் துரை.சம்பத் உள்ளிட்டோர் பேசினர். மாநகர குழு உறுப் பினர் சுபாஷ் நன்றி கூறி னார்.

திருப்பூர் மாவட்டத்தில் 24 மதுபானக் கடைகள் மூடல்

திருப்பூர், ஜூன் 22 - தமிழகத்தில் முதல் கட்டமாக 500 டாஸ் மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என   மாநில அரசு அறிவித்த நிலையில், திருப் பூரில் 24 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் பேருந்து நிலை யங்கள், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூ ரிகள் ஆகியவற்றுக்கு அருகாமையில் இருக் கும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மூடப்படும் மதுபானக் கடை களின் எண்கள் பட்டியலை மாவட்ட டாஸ்மாக்  நிர்வாகம் அறிவித்தது. அதன்படி திருப்பூர் மாநகரில் 18 டாஸ்மாக் கடைகள் உட்பட மாவட்டத்தில் 24 கடைகள் செயல்படாது என  அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம், கொங்கு மெயின் ரோடு,  ஊத்துக்குளி சாலை உட்பட மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. முன்னதாக திருப்பூர் மாவட் டத்தில் 24 கடைகள் மூடப்படும் என அறிவிக் கப்பட்ட நிலையில், எந்தெந்த கடைகள் அடைக்கப்படும் என்ற விபரம் தெரியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் குழம்பினர். மேலும் தங்களுக்கான பணி எங்கே என்பது குறித் தும் அறியாமல் கலக்கமடைந்தனர். இந்நிலையில் மூடப்படுவதாக அறிவித்தி ருந்த கடைகளில் திருப்பூர் பழைய பேருந்து  நிலையம் அருகில் உள்ள இரண்டு கடை கள், ஊத்துக்குளி சாலையில் உள்ள இரண்டு  கடைகள் மற்றும் கொங்கு மெயின்ரோடு பகு தியில் இரண்டு கடைகள் ஆகியவற்றில் வழக் கத்தை விட அதிக விற்பனை நடைபெற்ற தாகவும், மதுப்பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர் என்றும் விற்பனையாளர்கள் தெரி வித்தனர்.

 சாலை பணியாளர்கள் சங்க பல்லடம் உட்கோட்ட மாநாடு

திருப்பூர், ஜூன் 22- தமிழ்நாடு நெடுஞ்சா லைத் துறை சாலை பணியா ளர் சங்கம் பல்லடம் 8 ஆவது  உட்கோட்ட மாநாடு பல்ல டத்தில் உட்கோட்ட தலை வர் ராமசாமி தலைமை நடை பெற்றது. உட்கோட்ட இணைச் செயலாளர் எஸ்.அண்ணாதுரை துவக்கி வைத்து பேசினார். கோட்டத்  துணைத்தலைவர் சிவகுமார் நிறைவு  செய்து பேசினார்.

தெருநாய்களால் உயிரிழக்கும் ஆடுகள்

திருப்பூர், ஜூன் 22 - தெருநாய்களால் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் பிரச்ச னையில், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று  மக்கள் கோரியுள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ராக் கியாபாளையம் கிராமம், பாலாஜி நகர் பகுதியில் பள்ளத் தோட்டம் பழனிச்சாமி என்பவர் தோட்டத்தில் புதனன்று இரவு 4 ஆடுகளை  வெறிபிடித்த தெருநாய்கள் கடித்து  தின்று  கொன்று விட்டு சென்றுள்ளன. ஜேஏஎம் பாய் தோட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு இரண்டு ஆடுகளை கடித்து  கொன்றுள்ளது. கிழக்கு தோட்டம் ராயப்பன் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 6 ஆடுகளை கடித்து கொன் றுள்ளது. கிழக்கு தோட்டம் ராமசாமி தோட்டத்தில் ஒரு மாதத் திற்கு முன்பு ஆட்டை கடித்து 80 சதவீதம் தின்று விட்டு சென்றுள் ளது. இதுபோல் தெருநாய்களால் ஆடுகள் உயிழப்பது தொடர் கதையாக இருக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் திரு முருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் வியாழனன்று மனு  அளித்தனர்.

நடப்பாண்டில் 88 போக்சோ வழக்குகள் கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் பேட்டி

கோவை, ஜூன் 22- நடப்பாண்டில் தற்போது வரை 88 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழனன்று செய்தியாளர்களி டம் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 1,318 பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு “ப்ராஜெக்ட் பள்ளிக் கூடம்” திட்டத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது. கடந்தாண்டில் இந்த விழிப்புணர்வு மூலமாக 130 குற் றங்கள் தடுக்கப்பட்டன. நடப்பாண்டிலும் ப்ராஜெக்ட் பள்ளிக் கூடம் திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடக்கிறது. 40 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்று  தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில்  “மிஷன் ப்ராஜெக்ட் பிரீ” திட்டத்தின் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு தக வல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர் கள் சிலர் போதை பழக்கத்தில் சிக்காமல் இருக்க விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட அளவில் 126 கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. இதில், 13 இடங்களில் போதை பொருட்கள் விற் பனை இருப்பதாக தெரிகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மாவட்ட அளவில் 226 சிறார் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் தொடர்பாக போக்சோ வழக்குகள் பதிவானது. நடப்பாண்டில் தற்போது  வரை 88 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என் றார்.

அங்கன்வாடி மையத்தை திறக்க வலியுறுத்தி
குழந்தைகளுடன் பெற்றோர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு, ஜூன் 22- கோபிசெட்டிபாளையம் அருகே அங்கன் வாடி மையத்தை திறக்க வலியுறுத்தி குழந் தைகளுடன் பெற்றோர்கள் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம், திங்களூர் அருகே நிச்சாம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் குழந்தைகள் அங் கன்வாடி மையம் இருந்தது. இது பல ஆண்டு களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இங்கு 7 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தை மூடிவிட்டு, அருகே உள்ள ஒரு  அரசு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. ஆனால், தங்கள் குழந் தைகளை நிச்சாம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தி லேயே படிக்க வைக்க வேண்டும் என்றும், எனவே அதனை திறக்க வலியுறுத்தி பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஈரோடு குழந்தை வளர்ச்சி நலத்திட்ட அலுவலர் சூரிய கலா அங்கு சென்று பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், நிச்சாம்பாளை யம் அண்ணாநகர் பகுதி அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு, அங்கேயே குழந்தை களை படிக்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப் படும், என்றார். இதை ஏற்றுக்கொண்ட பெற் றோர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கடன் தொல்லை: விசைத்தறி தொழிலாளி தற்கொலை

நாமக்கல், ஜூன் 22- பள்ளிபாளையம் அருகே கடன் தொல் லையால் விசைத்தறி தொழிலாளி ஒருவர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், வெப்படை அருகே உள்ள வால்ராசபாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா (40). இவரது கணவர் சந்திரசேகரன் (47). இவர் கள் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 2  மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திரு மணம் ஆகிவிட்டது. இந்நிலையில், சந்திர சேகரன் குடும்ப சூழ்நிலை காரணமாக நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக கூறப் படுகிறது. கடந்த சில மாதங்களாக கடனை கட்ட முடியாமல் இருந்து வந்ததாக தெரி கிறது. மேலும், நிதி நிறுவனத்தினர் கடனை கேட்டு சந்திரசேகருக்கு நெருக்கடி கொடுத் துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட் டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதைக்கண்ட அவரது மனைவி சுசீலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சந்திர கேரரை மீட்டு, சிகிச்சைக்காக திருச்செங் கோடு அரசு மருத்துவமனை கொண்டு சென் றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரி தாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுசீலா  வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

ரயிலில் அலார சங்கிலியை இழுத்த 198 பேர் மீது வழக்கு

சேலம், ஜுன் 22- ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் தீ  விபத்து சம்பவங்கள் நடந்தாலோ அல்லது ஏதேனும் மருத் துவ உதவி காவல் துறையின் உதவி போன்றவை தேவைப் படும் பட்சத்தில் ரயில் பெட்டியில் உள்ள அலாரம் சங்கிலியை பிடித்து நிறுத்துவார்கள் இதன் மூலம் ரயில் உடனடியாக நிறுத்தப்படும். ஆனால், தேவையே இன்றி இந்த அலாரம் சங்கிலியை இழுத்து, ரயிலின் இயக்கத்தை நிறுத்துபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வே நிர்வா கம் மேற்கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக சேலம் ரயில்வே கோட்டத்திற்கு  உட்பட்ட சேலம் கோவை கரூர் ஈரோடு திருப்பூர் திருப்பத்தூர் காட்பாடி ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் தேவை இன்றி விளையாட்டுத்தனமாக அலாரம் சங்கிலியை பிடித்து இழுத்த நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் 198 பேர் மீது சேலம் ஆர்பிஎப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பழமையான தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றம்

கோவை, ஜூன் 22- மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் உள்ள 100  ஆண்டுகள் பழமையான தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றம் செய் யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு ஆங்கிலேயர்  ஆட்சிக்காலத்தில் வனப்பகுதி வழி யாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் - குன்னூர்  மலைப்பாதையில் கல்லாறு பகுதி யில் ஆறு சென்றது. இதனையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1925 ஆம்  ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட் டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம், கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட் டுப்பாட்டில் வந்தது. இதனையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகு தியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு  பாலம் கட்டப்பட்டது. அதன்பின் அப் பகுதியில் இருந்த தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது. 100 ஆண்டுகளை நெருங் கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது. மேலும் இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள் ளது. இதனையடுத்து ஓடந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் தங்க வேலு, தூரிப்பாலத்தை தனியார்  நிறுவன பங்களிப்புடன் புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், பணிகள் முழுமை யாக முடிக்கப்பட்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப் பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப் பட்டு அதனை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை ஆட்சி யர் கிராந்திகுமார்பாடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஓடந் துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சி யில் மேட்டுப்பாளையம் வட்டாட்சி யர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவ லர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் திர ளாக கலந்து கொண்டனர். நூற்றாண் டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.