districts

img

மாமூல் தர மறுத்த டாஸ்மாக் ஊழியர் இடமாற்றம்

சிஐடியு ஆவேசம் திருப்பூர், நவ.7- தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக்  கடையில் மாமூல் கேட்டு திமுக நக ரச் செயலாளர்  நிர்பந்தம் செய்த நிலையில், மாமூல் தர முடியாது என்று மறுத்த கடை ஊழியரான சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகி கள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து சிஐடியுவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத் தலைவர் ஆறு முகம், நிர்வாகி என்.கனகராஜ். இவர் கள் தாராபுரத்தில் டாஸ்மாக் கடை களில் வேலை செய்து வருகின்ற னர். இந்நிலையில் தாராபுரம் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் என்பவர் டாஸ்மாக் கடைகளில் மாமூல் கேட்டு ஊழியர்களை கட்டா யப்படுத்தி மிரட்டி வந்திருக்கிறார். முறைகேடாக மாமூல் தர முடியாது  என்று சிஐடியு ஊழியர்கள் மறுத் துள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்ற செல் வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு  டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் ஆறுமுகம், என்.கனகராஜ் இருவ ரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்துள்ள னர். எவ்வித நியாயமான காரண மும் இல்லாமல் ஆளும் கட்சியினர் சொல்லுக்கு அடிபணிந்து டாஸ் மாக் நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. அவர்களுக்கு வழங் கிய பணியிட மாறுதல் ஆணையில், எந்த குற்றச்சாட்டும், காரணமும் சொல்லாமல் “நிர்வாக நலன் கருதி”  என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் கண் டனம் தெரிவித்துள்ளது. இப்பிரச்ச னையில் டாஸ்மாக் நிர்வாகம் தவறி ழைக்காத ஊழியர்கள் மீதான பணி யிட மாறுதலை ரத்து செய்ய வேண் டும் என்று சிஐடியு வலியுறுத்தி யது. மேலும், ஆளும் கட்சி பிரமுக ரின் அத்துமீறிய அராஜக செய லைக் கண்டித்தும், சிஐடியு நிர்வாகி கள் இட மாறுதலை ரத்து செய்ய  வலியுறுத்தியும், தாராபுரம் நகரம்  முழுமையிலும் சிஐடியு சங்கத்தி னர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். சிஐ டியு சார்பில் சுவரொட்டி ஒட்டிக்  கொண்டிருந்த பாக்கியம் என்பவ ரிடம் திமுகவைச் சேர்ந்தவர்கள் 25  சுவரொட்டிகளைப் பறித்துச் சென்று விட்டனர். இதையடுத்து சிஐடியு திருப்பூர் மாவட்டத் துணைத்தலை வர் என்.கனகராஜ் தாராபுரம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.  திருப்பூரில் ஆர்ப்பாட்டம் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து  திருப்பூரில் வியாழனன்று சிஐடியு  டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்கச் செயலா ளர் ஒய்.அன்பு தலைமை வகித்தார். இதில் சிஐடியு தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனப் பொதுச்செய லாளர் திருச்செல்வன் கண்டன உரையாற்றினார். இப்பிரச்சனை யில் உரிய நடவடிக்கை எடுக்காவிட் டால், மாநிலம் முழுவதும் போராட் டம் நடத்தப்படும் என்று திருச்செல் வன் எச்சரிக்கை விடுத்தார். திமுக அரசுக்கு களங்கம் ஏற்படும் வகை யில் டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்ட திமுக நகரச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரின் நிர்பந்தத் திற்கு அடிபணிந்து செயல்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாமூல் தர முடியாது என்று நேர்மையாகச் செயல்பட்ட சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்க திருப்பூர் மாவட்டத் தலை வர் ஆறுமுகம், நிர்வாகி கனகராஜ் ஆகியோரின் இட மாற்ற உத்தரவை  ரத்து செய்து, மீண்டும் பழைய இடத் திலேயே பணி செய்ய ஆவண  செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி,  செயலாளர் கே.ரங்கராஜ், துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன்,  மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத்,  சாலையோர வியாபாரிகள் சங்கச்  செயலாளர் பி.பாலன் மற்றும் ஏராள மான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து  கொண்டனர். மேலும், இதுகுறித்து ஆட்சியர், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.