districts

img

ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிறைவு

தாராபுரம், மே 31 - கோடை விடுமுறையில் மாணவர் கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு  அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆயிரமாயிரம் அறிவியல் திரு விழா நிறைவு நாள் நிகழ்ச்சி தாராபுரம் மற்றும் திருப்பூரில் செவ்வாயன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் திருப்பூர் மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை இணைந்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆயிரமாயிரம் அறி வியல் திருவிழா என்ற பெயரில் அறிவி யல் தொடர்பான நிகழ்வுகளைப் பல் வேறு கிராமங்களிலும் நடத்தி வருகின்ற னர். அந்த வகையில் மூலனூர் ஒன்றியத் தில் இதுவரை 20 கிராமங்களில் நிகழ்வு கள் நடைபெற்றுள்ளன. அதன் நிறைவு  விழா சோமன்கோட்டை நடுநிலைப் பள் ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஆசிரியர் பயிற்றுநர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரி யர் இரா.குப்புசாமி தலைமை வகித்தார்.  அறிவியல் தூதுவர் தினேஷ்குமார் அறி வியல் சோதனைகள், அறிவியல் மேஜிக் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த  நிகழ்வுகளை செய்து காட்டினார். இல் லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என திரளானோர் கலந்து  கொண்டனர். அதே போல், திருப்பூரில் ஆயிர மாயிரம் அறிவியல் திருவிழா நிறைவு  நாள் கே.என்.பி புரம் தொடக்கப்பள் ளியில் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களான நந்தினி, மதுமிதா மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டார்.  வான வில் மன்ற கருத்தாளரான கிருத்திகா குழந்தைகளுக்கு அறிவியல் பரிசோத னைகள், ஓரிகாமி, அறிவியல் அற்புதங் கள், குழு விளையாட்டுகள், கைவண் ணக் கலைகள் ஆகியவற்றை செய்து காட்டினார்.

;