districts

img

நகராட்சி தலைவரை பதிலளிக்க விடாமல் அதிமுகவினர் கூச்சல்

தருமபுரி, ஜூன் 29- தருமபுரி நகராட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிக ளுக்கான 55 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஏற்றுகொள் ளப்பட்டது. இதனிடையே வளர்ச்சி பணிகளில் பாரபட்சம் காட் டுவதாகக் கூறி, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வா யன்று நகராட்சித் தலைவர் லட்சுமி மாது தலைமையில் அண்ணா கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடங் கிவுடன், சாலை பணிகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்,  கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிகள், சாலை மேம்பாட் டுப் பணிகள் மேற்கொள்வது அதற்காக ஒப்பந்தம் விடுவது  தொடர்பான உறுப்பினர்களின் ஒப்புதல் கோரி, ஒவ்வொரு தீர் மானமாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.  இதனிடையே நகராட்சியில் உள்ள அதிமுக உறுப்பினர் களின் வார்டுகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளிள் பாரபட் சம் காட்டுவதாக அதிமுக உறுப்பினர்கள் குற்றசாட்டுத் தெரி வித்து பேசினர். அதிமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தலைவர் லட்சுமி மாது மற்றும் ஆணையர் சித்ரா சுகுமார் பதில ளிக்க முற்பட்டனர். அவர்களை பேசவிடாமல், தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பேசினர். இதனால், நகர்மன்றக் கூட் டத்தில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.  அப்போது, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் எழுந்து  நின்று, கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 55 தீர்மானங்களுக்கு  ஒப்புதல் வழங்குவதாகவும், அவை அனைத்து தீர்மானங்க ளாக நிறைவேற்றலாம் என கூறி, கூட்டரங்கிலிருந்து வெளியே றினர். தொடர்ந்து, தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தலைவர் மற்றும் ஆணையர் வெளியேறுவதாகக் கூறி, அதி முக உறுப்பினர்கள் 13 பேர் கூட்டரங்கில் தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;