திருப்பூர், நவ. 5 – புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தியது. வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்துக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் இரா.ராஜ்குமார் தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் அ.பிரபு செபாஸ்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.எம்.பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.எம்.லோகநாதன், கல்வி மாவட்டத் தலைவர்கள் ஆர்.காளீஸ்வரி, கி.வெங்கடேஸ்வ ரன், ப.முத்துச்சாமி, ஏ.ஜெ.இக்பால் பாஷா, எஸ்.குமார், இரா. குப்புசாமி, வ.பாபு ஆகியோர் பேசினர். துணைப் பொதுச் செய லாளர் தா.கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.பால சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் பா.ஜெயலட் சுமி நன்றி கூறினார்.