தருமபுரி, ஜன.19- 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் ேததியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தஞ்சாவூரில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒடுக்கு வதற்காக போலீசார் தடியடி மற்றும் துப் பாக்கி சூடு நடத்தினர். இதில் நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் ஆகியோர் துப் பாக்கி சூட்டில் பலியானர்கள். இவர்களின் வீரதியாகத்தை போற்றும் வகையில் பல் வேறு இடங்களில் நினைவஞ்சலி கூட் டங்கள் நடைபெற்றன. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்விற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் சி. நாகராசன், மாவட்ட பொருளாளர் ஏ.தெய் வானை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி. நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.கோவிந்தசாமி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதில், மெழுகுவர்த்தி ஏந்தி தியாகிக ளுக்கு அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில் சிஐடியு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து திருப்பூர், உடு மலை, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம் உள்பட 14 மையங்களில் நினை வஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றது. பொங்க லூர் ஒன்றியம், கொடுவாயில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் கே. உன்னிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், பனி யன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத், விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் பஞ்சலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொங்கலூர் ஒன்றிய கமிட்டி சார்பில் தீக் கதிர் ஆண்டு சந்தா 20, ஆறு மாத சந்தா 4 ஆ கியவற்றுக்கான சந்தா தொகை ரூபாய் 44 யிரத்து 200 மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணனிடம் வழங் கப்பட்டது.