districts

img

தில்லி மாணவர்களுக்கு  ‘தமிழி’ பயிற்சிப் பட்டறை

புதுதில்லி, பிப்.23-   உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிர மணியன் தலைமையில் ‘தமிழி’ பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தில்லி பல்கலைக்கழக ஸ்ரீராம் கல்லூரியின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் கழகமும், திருவள்ளுவர் மாண வர் இளைஞர் இயக்கமும், வளர்ச்சி அறக்கட்டளையும் இணைந்து புதுதில்லியில் உள்ள தமிழ் மாணவர்களுக்காக நடத்திய இந்த ‘தமிழி’ பயிற்சிப் பட்டறையில் புதுதில்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரி, லேடி ஸ்ரீராம் கல்லூரி, ஹன்ஸ்ராஜ் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சுமார் 100 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்ட னர்.  ஸ்ரீராம் கல்லூரியின் வரலாறு மற்றும் அரசியல் அறி வியல் கழக தலைவர் தரணிசிவா, செயலர் குருலட்சுமி, துணைத் தலைவர் வள்ளிக்கண்ணு, செயற்குழு உறுப்பி னர்கள் சாய்சிவராம் காந்தி, சிந்துமித்ரா, ஹன்ஸ்ராஜ் கல்லூரி விகாஸ், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் பரதன் உள்ளிட்ட தில்லி வாழ் தமிழ் மாணவர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் புதுதில்லியில் உள்ள தமிழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து தொல்காப்பி யத்தில் உள்ள பாடல்களை ‘தமிழி’ எழுத்து வடிவில் கையெ ழுத்துப் பிரதியாக விரைவில் வெளியிடுவது என்று ஏகமன தாக முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழி பயிற்சியாளரும், கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும், அகில இந்திய திரு வள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கி ணைப்பாளருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் கூறுகையில், “உலகின் முதல் மொழி என்று போற்றப்படும் நமது தமிழ் மொழியின் முதல் எழுத்து வடிவமாகிய ‘தமிழி’ எழுத்து வடிவத்தை நாடு முழுவதும் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளிலும் சென்று பயிற்சி அளித்து வரு கிறோம். இதுவரை பத்தாயிரம் பேருக்கு தமிழி எழுத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் பேருக்கு தமிழி எழுத்து பயிற்சி அளிக்க திட்டமி டப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உலக தாய்மொழி நாளை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள தமிழ் மாணவர்களுக்காக தில்லி பல்கலைக்கழகத்தில் ஒருநாள் தமிழி பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள பல்வேறு கல்லூரி தமிழ் மாண வர்கள் இந்த பயிற்சிப் பட்டறையில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழி எழுத்துக்களை கற்றுத் தேர்ந்தனர். புது தில்லி வாழ் தமிழ் மாணவர்களைக் கொண்டு தொல்காப்பி யப் பாடல்களை தமிழி எழுத்து வடிவத்தில் புத்தகமாக வெளிக் கொணர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மும்பை, புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல முக் கிய நகரங்களில் தமிழி எழுத்துப் பயிற்சி பட்டறை விரை வில் நடைபெறும் என்றார்.

;