2022 காலநிலை மாற்றத்தின் கெடுதிகளுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டங்களுக்கு ஒரு சூப்பர் ஆண்டாக மாறும் என்று நம்பப்படுகிறது. 2020 சூழல் சீரழிவிற்கு எதிரான செயல்கள் நடைபெறும் ஆண்டு என்று நம்பப்பட்டது. அழிவின் பாதையில் சென்றுகொண்டிருக்கும் பூமியைக் காக்க இது உதவும் என்று கருதப்பட்டது. ஆனால் எதிர்பாராமல் வந்துசேர்ந்த கொரோனா இயற்கையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு தடையாக அமைந்தது.
2020இல் டாவோஸ் நகரில் நடந்த மாநாட் டில் பணக்கார நாடுகள் புவி வெப்ப உயர்வால் மனிதர்களுக்கும், உயிர்ப் பன்மயத்தன் மைக்கும் நிகழும் பாதிப்புகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காப்15 சீனா குன்மிங் (Kunming) நகரில் உலக உயிர்ப் பன்மையத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு நடக்கவுள்ளது. 2015 பாரிஸ் உச்சி மாநாடு ஏற்படுத்திய நேர்மறைத்தாக்கத்தை இந்த மாநாடு ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 2022ஆம் ஆண்டிற்குள் நுழைந்துள்ள பூமிக்கு காலநிலை மாற்றத் தைத் தடுக்கும் ஒரு சூப்பர் ஆண்டு இது வரை பிறக்கவில்லை. ஜனவரி 2022இல் நடக்கவிருந்த இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பேச்சுவார்த்தை கள் ஒமிக்ரான் பரவல் காரணமாக நான்கா வது முறையாக வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022இல் திட்ட மிட்டபடி காப்15 நடைபெறும் என்று தான் நம்புவதாக உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டின் (Convention on Biological Diversity CBD) வரைவு அறிக்கை தயார் செய்யும் பணிக்குழுவின் இணைத்தலைவர் பாஸைல் வான் ஹேவர் (Basile Van Havre) கூறியுள்ளார்.
21 அம்ச உடன்படிக்கை
குன்மிங் மாநாடு பிளாஸ்டிக் மாசு குறைப்பு, பூச்சிக்கொல்லிகளின் பயன் பாட்டை மூன்றில் இரண்டு மடங்கு குறைப் பது, ஆக்ரமிப்பு உயிரினங்களின் ஊடுரு வலைக் குறைப்பது, இதன் மூலம் உள்ளூர் உயிரினங்களின் அழிவைத் தடுப்பது, உயி ரூட்டமுள்ள சூழல் மண்டலங்களைக் காப் பது போன்ற 21 அம்சங்களை குறிக்கோளா கக் கொண்டு நடைபெறவுள்ளது.
இன்றில்லையென்றால் என்றுமில்லை
காலதாமதங்களுக்கு நடுவில் பூமியின் நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டி ருக்கிறது. உலகில் இப்போது ஆறாவது இன அழிவு (6th mass extinction) நடந்து கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மனிதச்செயல்களால் இது தீவிரமடைகிறது. மில்லியன் தாவர விலங்குகள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று ஐ.நா. விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் கூறியுள்ளது. நொடிப்பொழுதில் இத்தகைய பேரழிவு எங்கு, எப்போது, எவ்வாறு நிகழும் என்று அறியும் முன்பே நிகழ்ந்துவிடும் மோசமான சூழ்நிலையில் பூமி இன்று உள்ளது என்று அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 82 விழுக்காடு வனங்களில் வாழும் பாலூட்டி கள், 50 விழுக்காட்டிற்கும் கூடுதலான இயற்கை சூழல் மண்டலங்கள் ஏற்கனவே அழிந்துவிட்டதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. கொள்ளைநோய்க் காலத்தில் கொண்டு வரப்பட்ட பொதுமுடக்கத்தின்போது உலகம் முழுவதும் காடுகள் பெருமளவில் அழிக்கப் பட்டன. வளிமண்டலத்தில் பீதி ஏற்படுத்தும் அளவு பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கிறது. மனிதன் பூமியின் எல்லை யைத் தாண்டியும் வளங்களைச் சுரண்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளான். இந்நிலையிலும் உலக அரசுகள் தங்க ளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு அரிய வாய்ப் பையும் நழுவவிடுகின்றன. அவர்களால் நிச்சயிக்கப்படும் இலக்குகளை அவர்களே மீறுகின்றனர். மனிதன் பூமிக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டிய கடன் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அச லிற்கான வட்டி அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் மனிதன் என்றேனும் ஒரு நாள் இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரவேண்டி நேரிடும். இதைத் தாமதப்படுத்தும்போது கடனும் வட்டியும் மனிதகுலத்திற்கு பெரும் சுமை யாக மாறுகிறது. சி பி டி பிரதிநிதிகள் 2020 பிப்ரவரியில் ரோம் நகரில் கூடினர். பின்னர் மே முதல் ஜூன் வரை 2021இல் 196 நாடுகள் காணொளி மூலம் ஒன்றுகூடி பேசினர். கால தாமதம் நடப்பதன் காரணமாக இம்மாநாடு இருபிரிவுகளாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. அக்டோபர் 2021இல் முதல் அமர்வு நடந்தது. சீனா அப்போது காப்15 உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றது. நவம்பரில் கிளாஸ்கோவில் காப்26 மாநாடு நடந்தது. ஆனால் இதில் எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை. குன்மிங் மாநாடு நேருக்குநேர் நிகழ்வது ஐயத்திற்கு உள்ளாகி யிருக்கும் நிலையில் முதல் ஐயுசிஎன் ஆப்பி ரிக்க பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான மாநாடு 2022 மார்ச் மாதம் ருவாண்டாவின் கிகாலிநகரில் நடைபெறவுள்ளது. ஆப்பிரிக்க தலைவர்கள், குடிமக்கள், தன்னார்வக் குழுக்கள் ஒன்றுகூடி சூழலைக் காக்க பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதிகளை காப்பாற்றுவது தொடர்பாக விவாதிக்க வுள்ளனர். இந்த மாநாடு திட்டமிட்டபடி நடை பெறும் என்று ஐ.நா. பல்லுயிர்ப் பரவல் அமைப்பின் தலைவர் எலிசபெத் மாருமா எம்ரிமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2022 சூப்பர் ஆண்டாக வேண்டுமென்றால்?
2022 சூப்பர் ஆண்டாக வேண்டுமென் றால் காப்15 மாநாட்டில் உலக நாடுகள் ஏற்க னவே கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் உறுதியுடன் செயல்பட வேண்டும். 1.5-2 டிகிரிக்குள் புவி வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நட வடிக்கை எடுக்கவேண்டும். காலநிலை மாற்றம், இயற்கையின் அழிவு, பாலைவனமாதல் தடுப்பு என்று பூமியை அச்சுறுத்தும் மூன்று முக்கியப் பிரச்சனைகளில் 30 ஆண்டுகளுக்கு முன் ரியோ டி ஜெனீரோவில் ஏற்பட்ட ஒப்பந் தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். உருகுவே போல மற்ற நாடுகள் இதில் செயல்படவேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 100 பில்லியன் டாலர் நிதியுதவியை பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்கவேண்டும். 2030ஆம் ஆண்டிற்குள் 30 விழுக்காடு நிலப்பரப்பு மற்றும் கடற் பரப்பை அழிவிலிருந்து காப்பாற்ற பல நாடு கள் முன்முயற்சிகள் எடுத்துவருகின்றன. தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் குன்மிங் மாநாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய 21 அம்சங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வாதிடுகின்றன.
இயற்கைக்கு நேர்மறையாக
சூழலுக்கு நட்புடையது என்பது போல இன்று உலகளவில் இயற்கைக்கு நேர்மறை யானது என்ற வாசகம் பிரபலமடைந்து வரு கிறது. பி பி (BP), டோட்டல் எனர்ஜிஸ் (Total Energies) போன்ற பன்னாட்டு புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் உயிர்ப் பன்மயத்தன்மையை பாதிக்காதவகையில் தங்கள் உற்பத்தியை திட்டமிடுவதாகக் கூறு கின்றன. இயற்கைக்கு நேர்மறையானது என்றாலும் இல்லாவிட்டாலும் நிலம், கடல், காலநிலை மாற்றம், ரசாயனப்பொருட்கள், மாசுபடுதல், ஆக்கிரமிப்பு உயிரினங்கள் போன்றவை சிக்கலானவகையில் சூழலை பாதிக்கிறது என்று எலிசபெத் கூறியுள்ளார். இதே நிலை நீடித்தால் 1.5 டிகிரி என்பது கனவாகவே போய்விடும் என்று அவர் கூறுகிறார். சுழிநிலை (O) கார்பன் என்பது போல இயற்கைக்கு நேர்மறையான செயல்களும் முக்கியமானவை என்று இயற்கை வணிகம் அமைப்பின் இயக்குனர் இவா பேபே (Eva Babey) கூறுகிறார். காப்15 மாநாட்டின் தலை வராக புகழ்பெற்ற சீன சூழலியலாளர் ஆர்ச்சி யங் (Archie Young) செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 இறுதியில் எகிப்தில் நடைபெறும் காப்27 மாநாட்டிற்கு முன் அதன் இளைய சகோதரி என்று வர்ணிக்கப்படும் காப்15 குன்மிங் உயிர்ப் பன்மயத்தன்மை மாநாடு நல்ல முடிவுகளை கொண்டுவரும் என்று நம்புவோம்.