districts

img

தனியார் சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய பாக்கி தொகையை பெற்றுத்தருக

சேலம், ஏப்.25- ஏற்காட்டில் சாலையோர கடை கள் வைக்க அனுமதி வழங்கப் படும் என சிஐடியுவின் கோரிக் கையை ஏற்று அமைச்சர் கே.என். நேரு வியாபாரிகளிடம் வாக்கு றுதி அளித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு சுற் றுலா தளத்தில் சுற்றுலா பயணி களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆங்காங்கே சிறு சாலை யோர கடைகள் அமைக்கப் பட்டு இருந்தது. கடந்த சில  மாதங்களாக அந்த கடைகளை மாவட்ட நிர்வாகம் அப்புறப்ப டுத்தி வந்த நிலையில், அங்கி ருந்த தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த னர். இதன் ஒருபகுதியாக நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஏற்காட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை சிஐடியு மாவட்ட செய லாளர் டி.உதயகுமார் தலை மையில் சாலையோர வியாபாரி கள் சந்தித்து முறையிட்டனர்.  இதில், ஏற்காடு சுற்றுலா பய ணிகளை நம்பித்தான் தங்களின் வாழ்வாதாரம் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தொடர் பிரச்சனை யின் காரணமாக சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், மனு கொடுக்கும் போராட்டம், சாலை மறியல் ஆகிய போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே, தாங்கள் இப்பிரச்சனையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து அமைச் சர் கே.என்.நேரு வியாபாரிகளிடம் கூறுகையில், ஏற்காட்டில் சாலை யோர வியாபாரிகள் நடத்தி வரும் கடைகளை தொடர்ந்து நடத்த நட வடிக்கை எடுக்கப்படும். தற்போது 50க்கும் மேற்பட்ட கடைகள் கட் டப்பட்டுள்ளது. அதற்கான டெண் டரில் முன்னுரிமை அடிப்படை யில் முதலில் பாதையோர வியா பாரிகள் கடைகள் ஒதுக்கப்படும். மீதமுள்ள கடைகளை நடத்த ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் மூலம் சிறுதொகை கட்டிவிட்டு போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்திக் கொள்ளலாம் என அவர்  தெரிவித்தார். இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி யடைந்த சாலையோர வியாபா ரிகள், இப்பிரச்சனையில் தொடர் போராட்டங்களை நடத்திய சிஐடியு தலைவர்களுக்கு நன்றி கூறினர்.