districts

img

கரடு முரடான சாலை: அவதிக்குள்ளாகும் மாணவர்கள்

தருமபுரி, மார்ச 30- கரடு முரடான கதிர்நாயக்கன அள்ளி- வெங்கட்ராமன் கொட் டாய் செல்லும் சாலையை கடப் பதற்கு மாணவர்கள் அவதிப்படு கிற நிலையில், இச்சாலையை உட னடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ள னர்.  தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கதிர் நாயக் கன அள்ளி கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் அங் கன்வாடி குழந்தைகள் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி களுக்கு வெங்கட்ராமன் கொட் டாய், மாரியம்மன் நகர், ரோஜா நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பள்ளி  மாணவ, மாணவிகள் மற்றும் அங் கன்வாடி மைய குழந்தைகளும் படித்து வருகின்றனர். மேலும், வெங் கட்ராமன் கொட்டாய், மாரியம்மன்  நகர் செல்லும் ஜல்லிக் கற்கள்  பெயர்ந்து கரடு முரடாக உள்ள தால், இந்த சாலையை கடந்துதான் சென்று வருகின்றனர். மேலும், இந்த சாலை வழியாக கசியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளைச் சேர்ந்த பொதுமக் கள் கதிர் நாயக்கன அள்ளி கிராமத் திற்கு வரவேண்டி உள்ளது. மேலும், இப்பகுதி விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களை எடுத்துச் செல்லவும், அத்தியாவசிய பொருட் களை தங்களது  இரு சக்கர, நான்கு  சக்கர வாகனங்கள், கனரக வாக னங்களில் இந்த சாலை கடக்கும் போது அடிக்கடி பழுது ஏற்பட்டு பெரும் சிரமத்தை உண்டாக்கி வரு கின்றன. இச்சூழலில் பள்ளி குழந் தைகள் செல்லும் நேரத்தில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங் கள், கனரக வாகனங்கள் செல்லும் பொழுது ஜல்லிக் கற்கள் பெயர்ந்து  பள்ளி குழந்தைகள் மீது விழுந்து ரத்த காயம் ஏற்பட்டு வருகிறது. மழை மற்றும் இயற்கை சீற்றங் கள் காலங்களில் இந்த சாலையை கடக்க முடியாமல் மிகவும் பாதிப் பாக உள்ளது. எனவே, பொதுமக் கள் நலன் கருதி, கதிர்நாயக்கன அள்ளி - வெங்கட்ராமன் கொட் டாய் செல்லும் கரடு முரடான  சாலையை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக் கள் மாவட்ட நிர்வாகத்தை வலியு றுத்தியுள்ளனர்.

;