தூத்துக்குடி, ஜூன் 2
தில்லியில் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளா க்கப்பட்ட மல்யுத்த வீராங்க னைகளின் போராட்டத்திற்கு ஆதவாகவும், இந்த விவ காரத்தில் முக்கிய குற்ற வாளியான பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி யும் தூத்துக்குடியில் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கிஷோர் ஆகி யோர் தலைமையில் முற்று கைப் போராட்டம் நடை பெற்றது.
இதில், மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்டதலைவர் த.கலைச்செல்வி, பொரு ளாளர் சித்ரா, மாவட்ட துணை தலைவர் கமலம், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சரஸ்வதி, காளி யம்மாள், சிபி எம் மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, வாலிபர் சங்கம் சார்பில் அஜ்மல், உதயா, மாணவர் சங்கம் சார்பில் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடு பட்டவர்களை போலீசார் போலீசார் கைது செய்தனர்
திருநெல்வேலி
பாப்பாக்குடி ஒன்றிய குழு சார்பில் முக்கூடல் போஸ்ட் ஆபீஸ் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ,இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் இணைந்து வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டத்தை நடத்தின. மாதர் சங்க ஒன்றி யத் தலைவர் சமாதானம் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் லதா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் மாரியப்பன் , சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மாரி செல்வம் ஆகியோர் பேசினர்,
இதில் வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராம் பிரகாஷ், பீடி சங்க ஒன்றிய நிர்வாகிகள் இந்திரா பூ.பார்வதி ,ஜீவா மற்றும் வாலிபர் சங்க,மாதர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.