districts

img

ஆக.30 இல் ஒன்றிய அரசை எதிர்த்து மறியல்

திருப்பூர், ஆக.11- விலைவாசி உயர்வுக்கு மூல கார ணமான ஒன்றிய பாஜக அரசைக் கண் டித்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைந்த சிபிஐ மாநில மாநாட்டில் மூன்றாவது முறையாக மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா.முத்தரசன் திருப்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாட்டில், சுதந்திரத்தைப் பாதுகாப்போம், சோச லிசத்தை இங்கு அமைப்போம், பாசி சத்தை தோற்கடிப்போம் என்ற முழக் கத்தோடு சுதந்திர தினத்தை கொண் டாட முடிவு செய்துள்ளோம்.  மின்சார சட்ட திருத்த மசோதா தனி யார்மயமாக்கும் முடிவினால் தொழில் கள் மட்டுமல்ல, சாமானிய மக்களும் கடு மையாக பாதிக்கப்படுவர். எனவே மின் சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த் தும், அனைத்து பொருட்களின் விலை வாசிக்கு காரணமா ஒன்றிய அரசை எதிர்த்தும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒன் றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறி யல் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது, என்றார்.  இந்த சந்திப்பின்போது, அக்கட்சி யின் மாநில நிர்வாகிகள் கே.சுப்ப ராயன் எம்.பி., செல்வராசு எம்.பி., ஜி.பழனிசாமி, எம்.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., புறநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.இசாக், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

;