districts

img

ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை சேலம் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் சுபா தகவல்

சேலம், ஏப்.21-  சேலம் மற்றும் நாமக்கல் மாவட் டங்களில்,  வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக் கையாளர்களுக்கு 4ஜி சேவை வழங் கப்படும் என்று பிஎஸ்என்எல் சேலம் பொது மேலாளர் சி.பி. சுபா தெரிவித் துள்ளார்.  சேலத்தில் வியாழனன்று  அதி வேக இன்டர்நெட் சேவை குறித்த விழிப்புணர்வு பேரணியை, பிஎஸ் என்எல் ஊழியர்கள் நடத்தினர். அப் போது செய்தியாளர்களிடம் பேசிய பிஎஸ்என்எல் சேலம் பொதுமேலா ளர் சி.பி. சுபா கூறியதாவது, மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அதி வேக இன்டர்நெட் சேவை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிநவீன இணை யதள சேவையை தங்கு தடை யில்லாமல் பிஎஸ்என்எல் இணைப்பு மூலம் பெற்றுக் கொள்ளலாம். மிக குறைந்த கட்டணத்தில் இணை யதள சேவை வழங்கப்படுகிறது. செல்பேசி, சிம் கார்டுகளும் குறைந்த விலையில் வழங்கப்படுவதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சேலம் மற்றும் நாமக் கல் மாவட்டங்களில் 4ஜி சேவை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து, விரைவில் 5ஜி  சேவையும் பயன்பாட்டிற்கு வர வுள்ளது. தொடர்ந்து,  சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிஎஸ் என்எல் செல்பேசி இணைப்புகளில் தொடர்பு கோளாறு உள்ளதாக புகார்கள் உள்ளது.  அது தொழில்நுட்ப கோளாறு தான்.  விரைவில்  சரி செய் யப்படும். அதற்கான ஏற்பாடுகளை பிஎஸ்என்எல் மேற்கொண்டு வருகி றது இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் நிறுவன ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் இந்த பேரணியானது செவ்வாய்ப் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத் தில் இருந்து தொடங்கி சேலம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை பிஎஸ்என்எல் அலுவ லகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் பிஎஸ்என்எல் எம்ப்ளா யீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் இ.கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.