மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர், தொழிற்சங்க தலைவர் யு.கே.வெள்ளிங்கிரி-யின் 86 அவது பிறந்தநாளையொட்டி, வெள்ளியன்று, மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.