districts

img

காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்

நாமக்கல், அக்.30- நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால நிலை மாற்றம் குறித்த கருத்தரங்கை அமைச்சர் மா.மதி வேந்தன் துவக்கி வைத்து உரையாற்றினார். நாமக்கல் மாவட்டம், நளா ஹோட்டலில் திங்களன்று மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி யர் ச.உமா தலைமை வகித்தார். என்.ராஜேஸ்குமார் எம்.பி.,  முன்னிலை வகித்தார். கருந்தரங்கை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்து பேசுகையில், அனைத்து  மாவட்டங்களிலும் காடு மற்றும் மர பரப்பு 23.70 சதவிகிதத் திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்துவதற்கு பசுமை தமிழ்நாடு திட்டத்தினை தொடங்கி வைத்து, வனத்துறை, அனைத்து அர சுத்துறை, தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாண வியர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நீர் நிலை யங்களை பாதுகாத்திட ஈர நில இயக்கம் துவங்கப்பட்டுள் ளது. சுற்றுச்சுழலை பாதுகாக்க நெகிழி பொருட்களை பயன் படுத்தாமல் இருக்க வேண்டும். நெகிழி பொருட்களால் ஏற் படும் விளைவுகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டுமென அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, வனஉயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி  மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு, ஓவியம் மற்றும்  கட்டுரை போட்டிகளில் பங்குகொண்ட 300 மாணவ மாணவி யர்களில் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவியர்களுக்கு கேட யம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் கே.ராஜாங் கம், கால நிலை மாற்றத்துறை மணீஷ் மீனா, ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட் சியர்கள் சரவணன், சுகந்தி, நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.