பொள்ளாச்சி, ஜூன் 5- பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட 375 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறை யினர், இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர். கேரளா மாநிலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு சில அடை யாளம் தெரியாத நபர்கள், தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவ தாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வா ளர் அனந்தநாயகி தலைமையில் துணை ஆய்வாளர் இள வேந்தன், சிறப்பு துணை ஆய்வாளர் சுப்பிரமணி, தனிப்பிரிவு காவலர்கள்சபரி கிரி, ராஜ்குமார், நசீர், குமரேசன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக் காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றின் அருகே கேரள பதிவு எண் கொண்ட காரிலிருந்த ஏராள மான மூட்டைகளை இருவர், தமிழக பதிவு எண் கொண்ட காருக்கு மாற்றிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட காவல் துறையினர், அந்த மூட்டைகளை சோதனையிட்டதில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கேரள மாநிலம், மன்னார் காட்டைச் சேர்ந்த பிரமோத் மற்றும் மனோஜ் மேத்யூ, பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியைச் சேர்ந்த மதியழகன், கப்ப ளாங்கரையைச் சேர்ந்த மணிகண்டன், கோவை கரும்புக் கடையைச் சேர்ந்த காஜாமைதீன், குமரேசன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமி ருந்த ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள 375 கிலோ புகையிலை பொருட்களையும், ரூ.1.10 லட்சத்தையும், இரு கார்களை யும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கர்நாடக மாநிலத் திலிருந்து வாங்கி வரப்பட்ட இந்த குட்கா பொருட்களை கேரளா கொண்டு சென்று, அங்கிருந்து பொள்ளாச்சிக்குள் கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.