districts

img

அதிமுக கனவு கோட்டை தகர்ப்பு

கோவை, பிப்.22- கோவை மண் எங்களின் கோட்டை என மார்தட்டி வந்த அதிமுகவின் மமதையை தகர்த்தெரிந்த திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும் எழுச்சி பெற்று ஒரு மாநகராட்சி, 7 நக ராட்சி, 31 பேரூராட்சிகளை கைப்பற்றி அபார வெற்றியை ஈட்டியுள்ளது. 7 நகராட்சிகளும் திமுக வசம் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளை யம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி,  மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன. இதில் கூடலூர், கரு மத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய 3 நகராட்சி கள் புதிதாக தரம் உயர்த்தப்பட்டு முதல்  முறையாக நகராட்சி தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்திலுள்ள  7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றி யுள்ளது. மொத்தம் உள்ள 198 வார்டுகளில், திமுக 159 வார்டுகளில் வெற்றி பெற்றுள் ளது. மேலும், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மதி முக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அதி முக 23 இடங்களிலும், சுயேச்சைகள் 7  இடங்களிலும், பாஜக ஒரு இடத்தில் மட் டுமே வெற்றி பெற்றன. இதனால் கோவை  மாவட்டத்தில் அதிமுக ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

31 பேரூராட்சிகளும் திமுக வசம்

கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூ ராட்சிகளில் உள்ள 504 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 378 வார்டுகளில் அபார வெற்றி பெற்றது. அதிமுக 71 வார்டுகளில் வெற்றி பெற்றுள் ளது. சுயேச்சைகள் 27 வார்டுகளிலும், காங் கிரஸ் 12 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி 9 வார்டுகளிலும், மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மேலும், மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளில், 31 பேரூராட்சிகள் திமுக வசமானது.  அதேநேரம், வெள்ளலூர் பேரூராட்சி யில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அப்பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15  வார்டுகளில் 8 வார்டுகளில் பெரும்பான்மை பலத்துடன் வென்றுள்ளது. அப்பேரூராட்சி யில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் மருதாசலம், அவரது மனைவி தமிழரசி, மகன் கார்த்திகேயன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெற்றி  பெற்றனர். மோப்பிரிபாளையம் பேரூராட்சி யில் 15 இடங்களில் 5 வார்டுகளில் திமுக வென்ற நிலையில், 10 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இத னால் சுயேச்சைகள் பேரூராட்சித் தலை வரை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள் ளது.

திமுகவின் முதல் கோவை மேயர் 

கோவை மாநகராட்சியின் பெரும்பா லான வார்டுகளில் திமுக தொடர்ந்து முன் னிலை பெற்று வருகிறது. இதனால் திமுக கூட்டணி மிகப் பெரும்பான்மை பலத்துடன் மேயர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் முதல் முறையாக திமுக மேயர் பதவியை கைப்பற்றுவதுடன், முதல் பெண் மேய ராகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.